fbpx
Connect with us

Cinemapettai

இறுதி செய்யப்பட்ட மாஸ்டர் டிரைலர் தேதி.. கொரானா பீதியிலும் கொண்டாட தயாராகும் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இறுதி செய்யப்பட்ட மாஸ்டர் டிரைலர் தேதி.. கொரானா பீதியிலும் கொண்டாட தயாராகும் ரசிகர்கள்

தளபதி விஜய் முதன்முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களை பெரும் அளவில் கொண்டாட வைத்தது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்று மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் ரசிகர்களுக்காக தாறுமாறு பேசி இசை வெளியீட்டு விழாவை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றார்.

நிகழ்ச்சியின் உச்சமாக தல அஜித்தை தன் நண்பர் என்று கூறி மொத்த அரங்கையும் அதிரச் செய்தார். இது தளபதி ரசிகர்களை மட்டுமல்லாமல் தல ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது. அனிருத் இசையில் வெளியான மாஸ்டர் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் அடுத்து காத்துக் கொண்டிருப்பது மாஸ்டர் படத்தின் டீசருக்கு தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் லோகேஷ் கனகராஜ் இந்த வாட்டி டீசர் இல்லை ட்ரெய்லர் என ரசிகர்களை கொண்ட வைத்துள்ளார்.

தளபதி விஜய் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இணையதளங்களில் பல சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரானா பாதிப்பால் மாஸ்டர் படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போது மாஸ்டர் படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். வருகிற மார்ச் 31-ஆம் தேதி வரை தடை இருப்பதால் ஏப்ரல் முதல் வாரத்தில் மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top