fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மாஸ்டர் ட்ரைலர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த அர்ஜுன் தாஸ்.. விஜய் ரசிகர்கள் வெறித்தனம்

master-trailer-update

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் ட்ரைலர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த அர்ஜுன் தாஸ்.. விஜய் ரசிகர்கள் வெறித்தனம்

பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுவதைப் போல விஜய் வித்தியாசமாக நடிக்க மாட்டாரா என ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக வந்தவர்தான் லோகேஷ் கனகராஜ்.

கைதி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தளபதி விஜய்க்கு மாஸ்டர் என்ற அட்டகாசமான கதையை சொல்லி அப்பாயின்மெண்ட் வாங்கினார். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் வெளியீடாக டார்கெட் செய்யப்பட்டு அசுரவேகத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது .

கடைசி ரிலீஸ் தேதியில் கொரானா பாதிப்பால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு தற்போது 2020 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் படத்தின் டிரைலர் மட்டும் வெளியாகாமல் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் படத்தின் டிரைலரை பற்றி அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, தற்போது வரை ஆறு முறை மாஸ்டர் டிரைலரை பார்த்து விட்டதாகவும், மரண மாஸ் ஆக இருப்பதாகவும் ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் டிரைலரில் தளபதி பேசும் அந்த ஒரு டயலாக் தெறிக்கவிடும் எனவும் சும்மா இருந்த விஜய் ரசிகர்களை உசுப்பேற்றி விட்டுள்ளார். அவர்களைப் பற்றித்தான் தெரியுமே. உடனுக்குடன் அதனை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top