Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் டிரைலர் இந்திய சினிமாவையே அதிர வைக்கும்.. அப்புறம் என்னப்பா, அவரே சொல்லிட்டாரு!
முன்னரெல்லாம் ஒரு படத்தை பார்த்து விமர்சனம் சொன்ன காலம் போய் படத்தின் டிரைலரை பார்த்து விமர்சனம் சொல்லும் காலம் வந்துவிட்டது போல.
படம் ஷூட்டிங் தொடங்கிய நாள் முதல் படம் ரிலீஸ் வரை அந்தப் படத்தினைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு நாள் வெளியிட்டு அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதுதான் தற்போதைய மார்க்கெட் நிலவரம்.
அந்த காலத்தில் ரிலீஸின் போது மட்டுமே கொண்டாட்டம் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. அந்த வகையில் அடுத்ததாக வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் பெரிய படம் என்றால் அது விஜய் நடித்த மாஸ்டர் படம் தான்.
விஜய் மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கைதி படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் அட்டகாசமான ஹிட். இந்நிலையில் மார்ச் மாதம் படத்தின் ட்ரைலர் வெளியாக இருந்த நிலையில் தள்ளிச் சென்றது. எப்போது டிரைலர் வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ரசிகர்களை உசுப்பேத்தும் விதத்தில் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தின் டிரைலரை பற்றிய ரகசியத்தை பகிர்ந்துள்ளார். ட்ரைலர் மிக பிரம்மாண்டமாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கண்டிப்பாக அடுத்த பெரிய ஹிட் படமாக இது இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
