fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மாஸ்டர் டிரைலர் இப்படித்தான் இருக்கும்.. விஜய் ராவா நடிச்சிருக்காரு.. ஸ்பெஷல் அப்டேட்

master

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் டிரைலர் இப்படித்தான் இருக்கும்.. விஜய் ராவா நடிச்சிருக்காரு.. ஸ்பெஷல் அப்டேட்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி 22 ஆம் தேதி எனவும் பட வெளியீட்டு தேதி ஏப்ரல் 9ம் தேதி எனவும் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போதுள்ள நாட்டின் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தேதிகள் மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்யுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளதாக பல இடங்களில் கூறப்பட்டது. அதேபோல் கேங்க்ஸ்டர் படமாகவும் இருக்கும் என லோகேஷ் கூறியது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கைதி படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஒருவர் சமீபத்திய பேட்டியில் மாஸ்டர் டிரைலரை பார்த்து விட்டதாக கூறினார். அதில் விஜய் மிகவும் ராவாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது இதுவரை இல்லாத அளவிற்கு வெறித்தனமாகவும் சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷமாகவும் நடித்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் தனது ரசிகர்களின் எதிர் பார்ப்புகள் இரட்டிப்பாகிறது.

தற்போது நாட்டின் பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக மாஸ்டர் ட்ரெய்லரை வெளியிடலாம் என படக்குழுவினருக்கு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஒரு விஷயத்தைப் பற்றி நினைக்காமல் இருந்தாலே பாதி பிரச்சனைகள் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top