மாஸ்டர் டிரைலருக்கு தேதி குறித்த லோகேஷ்.. கொண்டாட ரெடியாகும் ரசிகர்கள்

தளபதி விஜய் முதன்முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களை பெரும் அளவில் கொண்டாட வைத்தது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்று மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் ரசிகர்களுக்காக தாறுமாறு பேசி இசை வெளியீட்டு விழாவை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றார்.

நிகழ்ச்சியின் உச்சமாக தல அஜித்தை தன் நண்பர் என்று கூறி மொத்த அரங்கையும் அதிரச் செய்தார். இது தளபதி ரசிகர்களை மட்டுமல்லாமல் தல ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது. அனிருத் இசையில் வெளியான மாஸ்டர் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் அடுத்து காத்துக் கொண்டிருப்பது மாஸ்டர் படத்தின் டீசருக்கு தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் லோகேஷ் கனகராஜ் இந்த வாட்டி டீசர் இல்லை ட்ரெய்லர் என ரசிகர்களை கொண்ட வைத்துள்ளார்.தளபதி விஜய் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இணையதளங்களில் பல சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வருகிற 22-ஆம் தேதி மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என அதிகாரபூர்வமான அறிவிப்பை இசை வெளியீட்டு விழா மேடையில் கூறியுள்ளார். இதனைக் கொண்டாட ஏற்கனவே தளபதி ரசிகர்கள் ரெடியாகி விட்டனர்.

என்ன நண்பா.. ரெடியா?

Leave a Comment