fbpx
Connect with us

Cinemapettai

மாஸ்டர் டிரைலர் தேதி குறிச்சாச்சு.. அதிரடி அறிவிப்பால் அசந்து போன விஜய் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் டிரைலர் தேதி குறிச்சாச்சு.. அதிரடி அறிவிப்பால் அசந்து போன விஜய் ரசிகர்கள்

சினிமாவை பொறுத்தவரை தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் அனைவரும் எதிர்பார்க்கும் முதல் படம் என்னவென்றால் அது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம். பெரிய நடிகர்களின் படத்தை வெளியிட்டால் மட்டுமே மீண்டும் திரையரங்குகளுக்கு மக்கள் கூடுவார்கள் என்ற சிந்தனையில் செயல்பட இருக்கிறார்கள்.

ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் தற்போது நிலவிவரும் சூழ்நிலையால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்தது அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது மாஸ்டர் படத்தின் டிரைலரை தான்.

மாஸ்டர் படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய ஸ்டண்ட் சில்வா தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் டிரைலர் தேதி உறுதி செய்துவிட்டதாக ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். கொஞ்சமும் இந்த அப்டேட்டை எதிர்பார்க்காத விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் திக்குமுக்காடினார்.

அனேகமாக விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகலாம் எனவும் மாஸ்டர் வட்டாரத்தில் செய்திகள் கசிந்து வருகின்றன. இல்லை வழக்கம்போல் ரசிகர்கள் ஃபேக் ஐடி தயார் செய்து அறிவிப்பை கொடுத்தார்களா எனவும் குழப்பத்தில் உள்ளனர்.

Continue Reading
To Top