Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமேசான்.. இது எந்த கேப்புல நடந்தது என அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் தான் மாஸ்டர். இன்னும் சொல்லப்போனால் 2020 இல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமும் இதுதான்.
ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாறுதல்கள் ஏற்பட்டு தற்போது எப்போது வெளியிடப் போகிறார்கள் என்ற எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ரசிகர்கள் விழித்து வருகின்றனர்.
இதற்கிடையில் அமேசான் மற்றும் நெட்ப்ளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் மாஸ்டர் படத்தை கைப்பற்ற பல்வேறு வகையில் முயற்சி செய்ததையும், ஆனால் தியேட்டரில் தான் படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தெரிவித்ததையும் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.
திடீரென அமேசான் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் படங்களில் லிஸ்டை அறிவித்தது. அதில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாஸ்டர் என்ற படம் வெளியாக இருப்பதாக அதில் இடம்பெற்றிருந்தது.

amazon-master
இதனை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அந்த படம் 2017 ஆம் ஆண்டு உருவான ஹாலிவுட் மாஸ்டர் படம் தான் அந்த தேதியில் வெளியாக உள்ளது.
இந்த செய்தியை கேள்விப்பட்ட பிறகுதான் விஜய் ரசிகர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர். மாஸ்டர் படம் கண்டிப்பாக வசூலில் பெரிய சாதனை படைக்கும் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு புரளி கிளம்பியது அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.
