Videos | வீடியோக்கள்
இணையதளத்தை பொளந்து கட்டும் மாஸ்டரின் பொளக்கட்டும் பர பர பாடல்.. அனிருத் இசையில் தெறிக்கும் லிரிக் வீடியோ
தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் “ஒரு குட்டி கதை” சிங்கிள் வெளிவந்த சென்சேஷனல் மற்றும் வைரல் ஹிட் அடித்தது. அனிருத் இசையமைக்க தளபதி விஜய் அவர்களே பாட, இப்பாடல் முழுவதும் பாசிட்டிவ் பீல் பாட்டரியே உள்ளது.
தளபதி விஜய் உபயோகிக்கும் வார்த்தைகள் பலவற்றை இப்பாடலில் அருண் ராஜா காமராஜ் உபயோகித்துள்ளர், மிகவும் சிமிபிளாக உள்ளது. இப்பாடலுக்கு பக்க பலமாக அமைந்தது லோகி அவர்களின் லிரிக் வீடியோ. இப்பாடல் ஹிட் அடிக்க முக்கிய காரணம் அதன் சிமிப்ளிசிட்டி தான்.
பின் மாஸ்டர் படத்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடல் இணையதளத்தில் புரட்டிப் போட்டது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
தற்போது இந்த படத்தின் ரொமான்டிக் சாங் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ லிரிகல் விடியோ வெளிவந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.
ஆனால் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் மற்றும் லுக் ஆகியவை பெரும் சஸ்பென்சாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது வெளியான ‘பொளக்கட்டும் பர பர’ பாடல் லிரிக் வீடியோவில் மிகவும் தர லோக்கலாக உள்ளார் விஜய் சேதுபதி.
இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் அனிருத்தின் இசையில் சந்தோஷ் நாராயணன் குரலில் உருவாகிய இந்த பாடல் இன்று பலரது வீட்டில் ஸ்பீக்கர்களை உடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
