Connect with us

Cinemapettai

வசூலுக்கு செம்ம பிளான் போட்ட விஜய்.. இந்தமுறை இந்தியாவுக்கே டார்கெட் வைக்கும் தளபதி

master-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வசூலுக்கு செம்ம பிளான் போட்ட விஜய்.. இந்தமுறை இந்தியாவுக்கே டார்கெட் வைக்கும் தளபதி

தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் முதல்முறையாக இணைந்த திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பதால் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் சிக்கலான சூழ்நிலையால் ரிலீஸ் தேதியில் மாறுதல் ஏற்பட்டது.

இந்த நேரத்தில்தான் விஜய்க்கு செம ஐடியா ஒன்று தோன்றி உள்ளது போல. பிகில் படத்தின் மூலம் வட மாநிலங்களில் ஒரு நல்ல வரவேற்பைப் பெற்ற விஜய், மாஸ்டர் படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட யோசித்து வருகிறாராம்.

தளபதி விஜய் இதுவரை ஹிந்தி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அங்கே விஜய்க்கு என்று ஒரு கூட்டம் உருவாகி உள்ளது. மொழி தெரியாத பிகில் படத்திற்கே மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய்யின் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஐந்து மொழிகளில் மாஸ்டர் படம் வெளியாக உள்ளது. பேன் இந்தியா படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை பற்றிய பேச்சுதான் தற்போது சினிமா உலகம் முழுவதும்.

விஜய் சேதுபதி தற்போது அமீர்கான் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதால் அவரையும் பயன்படுத்தி செம கல்லா கட்ட முடிவெடுத்து விட்டார்களாம் மாஸ்டர் படக்குழுவினர். ஏற்கனவே விஜய்க்கு வட இந்தியாவில் ஒரு நல்ல மார்க்கெட் உள்ள நிலையில் விஜய் சேதுபதியும் இணைந்து இருப்பது மாஸ்டர் படத்தை வசூலில் வேற லெவலுக்கு கொண்டு சென்று விடும் என்கிறது சினிமா வட்டாரம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top