fbpx
Connect with us

Cinemapettai

மாஸ்டர் படத்தின் கதை இணையத்தில் லீக்.. செம அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தின் கதை இணையத்தில் லீக்.. செம அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக போக படத்தில் உள்ள ஒவ்வொரு சஸ்பென்ஸ் விஷயங்களும் வெளி வரத் துவங்கியுள்ளது லோகேஷ் கனகராஜை வருத்தமடைய செய்துள்ளது.

முன்னதாக லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடிக்க இருந்த செய்தியை படம் வெளியாகும்வரை சொல்ல வேண்டாம் என வைத்திருந்த நிலையில் எப்படியோ அந்த செய்தி வெளிவந்தது.

தற்போது மாஸ்டர் படத்தின் கதையும் மெல்ல மெல்ல கசிந்துள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய்யின் ஓப்பனிங் சீன் வாத்தி கம்மிங் பாடலுடன் தொடங்குகிறதாம்.

மாஸ்டர் கதைச்சுருக்கம்

மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வகுப்பு நேரங்களிலும் கல்லூரிக்குள் இருக்கும்போதும் குடி கூத்து என அலப்பரை செய்து வருகிறார்.

விஜய்யின் இந்த கெத்தை பார்த்து அதே கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரியும் மாளவிகா மோகனன் அவர் மீது காதலில் விழுகிறார். ஒரு கட்டத்தில் மாணவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையால் விஜய்யின் மீது பழி போடப்படுகிறது.

விஜய்யின் குடிப்பழக்கம் தான் இந்த மொத்த பிரச்சனைக்கும் காரணம் என கல்லூரியை விட்டு நீக்கி விடுகின்றனர். இதன் பிறகுதான் அனாதை குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும் ஹாஸ்டல் வார்டனாக பொறுப்பேற்கிறாராம்.

அங்குள்ள பல சிறுவர்கள் போதைக்கு அடிமையானதையும், போதைப்பொருள்கள் விற்பதையும் கண்டு பிடிக்கும் விஜய், அதை யார் செய்வது, இதற்கு பின்னால் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் கண்டுபிடிக்க ஆரம்பிக்கிறார்.

குழந்தைகளுக்கு நேரடியாக போதை பொருட்களை விற்கும் ஆளாக இருக்கும் அர்ஜுன் தாஸை முதலில் பிடித்து அதன் மூலம் அதற்கெல்லாம் காரணம் அர்ஜுன் தாஸ் அண்ணன் விஜய் சேதுபதிதான் என்பதையும் கண்டுபிடிக்கிறார்.

இறுதியில் இதை எப்படி ஒழித்து கட்டுகிறார் என்பதைப்போல படத்தை முடிக்கிறார்களாம். இதில் வழக்கம்போல லோகேஷ் கனகராஜ் மேக்கிங் ஸ்டைல், அதிரடி திரைக்கதை, சண்டைக்காட்சிகள் என படம் முழுக்க பரபரப்பாக இருக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்த கதை இணையத்தில் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் கதைதான் மாஸ்டர் படத்தின் கதை என்பது அதிகாரப்பூர்வமாக வெளிவர வில்லை என்றாலும் கசிந்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

Continue Reading
To Top