Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் படம் பற்றி விஜய் சேதுபதி சொன்ன அந்த ஒத்த வார்த்தை.. முதன்முறையாக வெளிவந்த விமர்சனம்
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தாலும் கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஆகியும் படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்தார் மக்கள் செல்வன்.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.
இந்த படத்திற்கு தான் மொத்த தமிழ் சினிமாவே வெயிட்டிங். காரணம் ஏற்கனவே தியேட்டர் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாஸ்டர் படம் தான் அதை மீட்டெடுக்கும் என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
இது ஒருபுறமிருக்க ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக வேண்டிய படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு தான் கொண்டு வர முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.
முதல் முறையாக இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாத கொடூர வில்லனாக நடித்துள்ளதாக சமீபத்தில் பேட்டி கொடுத்தார்.
ஆனால் மாஸ்டர் படம் எப்படி வந்துள்ளது என்பது பற்றி விஜய் சேதுபதி இதுவரை எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தின் விழாவில் மாஸ்டர் படத்தைப்பற்றி ஒற்றை வார்த்தையில் கூறியுள்ளார்.
மாஸ்டர் படம் மாஸ்டர் பீஸ் என செம்மையான மேட்டரை வெளியிட்டுள்ளார். இதனைக் கேட்ட தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அவர்கள் இருக்கும் சந்தோஷத்தை பார்த்தால் படத்தை OTTயில் வெளியிட்டாலும் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள் போல.
