Connect with us

Cinemapettai

மாஸ்டர் ரிலீசுக்கு முட்டுக்கட்டை போட்ட டி ஆர்.. தளபதிய நிம்மதியா தூங்க விடமாட்டாங்க போல

master

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் ரிலீசுக்கு முட்டுக்கட்டை போட்ட டி ஆர்.. தளபதிய நிம்மதியா தூங்க விடமாட்டாங்க போல

மாஸ்டர் படத்திற்கு ஏற்கனவே அரசாங்கம் சார்பில் வருமான வரித்துறையினர் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் சினிமாவை சேர்ந்த விநியோகஸ்தர்களும் தங்கள் பங்குக்கு தளபதியை வச்சு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடியாக உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். மாஸ்டர் படத்தின் போஸ்டர்களும் அனிருத் இசையில் உருவான குட்டிக்கதை பாடல் மற்றும் வாத்தி கம்மிங் என்ற பாடல்களும் மாஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்தில் வைத்துள்ளன.

இந்நிலையில் வருகிற 15-ஆம் தேதி மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாஸ்டர் வியாபாரம் சில நாட்களுக்கு முன்னரே படு ஜோராக நடந்து முடிவடைந்தது. படத்தின் வெளியீடும் ஏப்ரல் 9ஆம் தேதி என அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கொரானா வைரஸ் காரணமாக மார்ச் மாத இறுதியில் இருந்து அனைத்து திரையரங்குகளும் மூடப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி ஜிஎஸ்டி என்னும் ஒரு வரி கொள்கையை இந்தியா முழுவதும் கொண்டு வந்தார். ஆனால் விநியோகஸ்தர்களுக்கு மட்டும் தமிழ்நாட்டில் லோக்கல் டேக்ஸ் 8% வசூல் செய்கின்றனர். அதுபோக டிடிஎஸ் வேறு 10% வசூல் செய்கிறார்கள். இதனால் முழு நஷ்டமும் வினியோகஸ்தர்களுக்கு வருகிறது.

மற்ற எந்த மாநிலங்களிலும் லோக்கல் டேக்ஸ் 8% வசூலிப்பது இல்லை ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தமிழக அரசு லோக்கல் டேக்ஸ் வசூலிக்கிறார்கள். இது எங்களை மிகவும் பாதிப்படைய செய்கிறது. இதனால் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டிஆர் ராஜேந்தர் மார்ச் 27ஆம் தேதிக்கு மேல் எந்த படத்தையும் வாங்கி வெளியிடப் போவதில்லை என அறிக்கை விடுத்துள்ளார்.

இதனால் மாஸ்டர் படக்குழு மட்டுமில்லாமல் தளபதி விஜய்யும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். டி ராஜேந்தர் மகன் சிம்புவின் வாலு படப் பிரச்சினையில் தளபதி விஜய் தலையிட்டு படம் வெளியிட உதவி செய்தார் என்ற நன்றியை கூட மறந்து விட்டாரா டி ராஜேந்தர் என தளபதி ரசிகர்கள் இஸ்டத்துக்கு அவரை வைது வருகின்றனர்.

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டாராம் தளபதி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top