fbpx
Connect with us

Cinemapettai

உலகம் முழுவதும் வைரலான குட்டி ஸ்டோரி.. வேற லெவல் ஹிட்டடித்த தளபதியின் சிங்கள் வீடியோ

vijay-kutty

Videos | வீடியோக்கள்

உலகம் முழுவதும் வைரலான குட்டி ஸ்டோரி.. வேற லெவல் ஹிட்டடித்த தளபதியின் சிங்கள் வீடியோ

தளபதி விஜய் முதன்முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக இளம் நாயகி மாளவிகா மேனன் நடித்துள்ளார். மேலும் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தில் நடித்திருப்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

கத்தி படத்திற்கு பிறகு அனிருத் இசை அமைப்பதால் மாஸ்டர் படத்திற்கு எதிர்பார்ப்பு இரட்டிப்பாகி உள்ளது. சமீபத்தில் நடந்துமுடிந்த காதலர் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு ஒரு குட்டிக்கதை பாடலை வெளியிட்டது.

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தளபதி விஜய்யின் அழகான குரலில் வெளிவந்த குட்டிக்கதை பாடல் 24 மணிநேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களையும் ஒரு மில்லியன் லைக்குகள் பெற்று புதிய சாதனை படைத்தது.

இந்நிலையில் குட்டி கதை பாடல் அனிருத்தின் ஒய் திஸ் கொலைவெறி பாடலை போல உலகமெங்கும் பிரபலமாகி வருகிறது. வெளிநாட்டில் தளபதி விஜய்யின் குட்டி கதை பாடலுக்கு பள்ளி மாணவர்கள் டான்ஸ் ஆடும் வீடியோ வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இதன் மூலம் உலகமெங்கும் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாகி வருகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது இந்த குட்டிக் கதை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top