Tamil Cinema News | சினிமா செய்திகள்
மிரட்டும் மாஸ்டரின் குட்டிக்கதை.. பின்வாங்கிய சூரரைப்போற்று.. சாதனை மேல் சாதனை செய்யும் விஜய்
காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு தளபதி விஜய் குரலில் அனிருத் இசையில் பாடிய மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கதை பாடல் வெளியாகியது. அனைவருமே மரண குத்து சாங் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென இனிமையான பாடல் வெளிவந்தது.
கல்லூரி மாணவர்களை மோட்டிவேட் செய்யும் விதம் உருவாகியிருந்த இந்த பாடல் கேட்க கேட்க மிகவும் அழகாக உள்ளது. முழுக்க முழுக்க இங்கிலீஷ் கலந்து அவ்வப்போது தமிழும் கலந்து தங்கிலீஷில் உருவாகியுள்ள இந்தப் பாடலை தளபதி விஜய்யின் குரலில் கேட்க அவ்வளவு இனிமையாக உள்ளது.
குட்டிக்கதை பாடல் வெளியான 16 மணி நேரத்தில் ஏழு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதற்கு முன் பிகில் படத்தில் தளபதி குரலில் வெளியான வெறித்தனம் பாடல் 16 மணி நேரத்தில் நான்கு மில்லியன் பார்வையாளர்களை பெற்றதே சாதனையாக இருந்தது.
தொடர்ந்து யூடியூப் ரன்னிங்கில் நம்பர் ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு முன் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று படத்தின் வெய்யோன் சில்லி என்ற காதல் பாடல் முதலிடத்தில் இருந்தது. ஜி வி பிரகாஷ் இசையில் மனதை வருடும் மெலடியாக உருவாகியிருந்த இந்த பாடல் கேட்ட உடனேயே ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.
தற்போது வரை வெய்யோன் சில்லி லிரிக் விடியோ 1.6 மில்லியன் பார்வையாளர்களையும், வீடியோ 2.3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
