Tamil Cinema News | சினிமா செய்திகள்
முன்னணி நடிகர்களை தூக்கி சாப்பிட்ட தளபதி விஜய்.. மாஸ் காட்டும் மாஸ்டர்
தளபதி விஜய்யின் படங்கள் சமீபகாலமாக மிகப்பெரிய வசூலை பெற்று வருகின்றது. கடைசியாக வெளியாகி மூன்று திரைப்படங்களும் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை படத் தயாரிப்பு நிறுவனங்களே வெளியீட்ட செய்திகள்தான்.
சமீபத்தில் வெளியான பிகில் படம் தான் தமிழகத்தில் அதிகம் விற்கப்பட்ட படமாக கருதப்பட்டது. இதன் விலை சுமார் 75 கோடி ஆகும். ஆனால் அதையும் மிஞ்சும் அளவிற்கு தற்போது மாஸ்டர் படத்தின் வியாபாரம் படுஜோராக நடந்து முடிந்துள்ளது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட பிகில் படத்தின் வியாபாரத்தை விட 5 கோடி கூடுதலாக விற்றுள்ளது. மேலும் அண்டை மாநிலங்களின் வியாபாரமும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்தவகையில் தெலுங்கு பட உரிமையை பிகில் படத்தை வாங்கி வெளியிட்ட ஈஸ்ட் கோஸ்ட் நிறுவனமே பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் பிகில் படத்தின் மூலம் நல்ல லாபம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் படப்பிடிப்பே முடிவடையாத நிலையில் படத்தின் வியாபாரம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய அளவில் விற்பனையாகியுள்ளது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வெளிநாட்டு வியாபாரங்களும் பிகில் படத்தை விட அதிகமாகவே விற்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
