Connect with us
Cinemapettai

Cinemapettai

dhoni-vijay

Sports | விளையாட்டு

தளபதியின் குட்டி ஸ்டோரி பாடலின் தல தோனி வெர்சன் ரிலீஸ்.. இணையத்தில் மாஸ் ஹிட் அடித்த வீடியோ

தல தோனி தன்னுடைய கேப்டன்ஷிப் திறமையால் இந்திய அணிக்கு 20 ஓவர் உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஷிப் டிராபி போன்றவற்றை வென்று கொடுத்துள்ளார்.

உலகத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் கேப்டன்கள் மத்தியில் இந்த மூன்றையும் பெற்றது இவர் ஒருவர் மட்டுமே. அது மட்டுமில்லாமல் எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அமைதியாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்.

சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆனபோது டிவியை ஆஃப் பண்ணிவிட்டு சென்ற இந்திய மக்கள் மத்தியில் தோனி இருக்கும் வரை கிரிக்கெட்டை கடைசி வரை பார்க்கலாம் என உணர வைத்தவர்.

அப்படி தோனி உலகம் முழுக்க பல ரசிகர்களை கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் புகழ்பெற்ற கிரிக்கெட் லீக் ஆக இருப்பது ஐபிஎல் தான். அதில் தனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மூன்று முறை கோப்பையை பெறச் செய்தார்.

தல தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தொகுப்பாளர் பாவனா குரலில் குட்டி ஸ்டோரி பாடலின் தல தோனி வெர்ஷனை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் ஹிட்டடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் லின்க் : Click Here

Continue Reading
To Top