Tamil Cinema News | சினிமா செய்திகள்
எங்கயா இருந்த இவ்வளவு நாளா! மாஸ்டர் படத்தைப் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை கொண்டாடும் விஜய்!
தமிழ் சினிமா உலகம் தற்போது முடங்கியுள்ள நிலையில் தியேட்டர் பிஸினஸும் முடங்கிவிட்டது. மீண்டும் திரையரங்குகளுக்கு மக்களை கொண்டுவர சூரரைப்போற்று மற்றும் மாஸ்டர் படத்தைத்தான் நம்பியிருந்தார்கள்.
சூர்யாவின் சூரரைப்போற்று படம் தியேட்டர் ஓனர்களுக்கு டாட்டா காட்டி விட்டது. அடுத்ததாக தியேட்டர் ஓனர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருப்பது விஜய்யின் மாஸ்டர் படத்தை தான். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநகரம், கைதி போன்ற படங்களைப் பார்த்தபோது தளபதி விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் மீது ஒரு மரியாதை ஏற்பட்டு அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார். அதை மாஸ்டர் படத்தில் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டாராம்.
ஏப்ரல் 9ம் தேதி வெளியாக இருந்த மாஸ்டர் படம் வெளியீட்டில் மாறுதல்கள் ஏற்பட்டதால் படத்தில் இருந்த சில மாற்றங்களைச் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் தான் முழு படமும் தயாரிப்பு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த முழு படத்தையும் தளபதி விஜய் மற்றும் படக்குழுவினர் சமீபத்தில் பார்த்துள்ளனர். படத்தைப் பார்த்து மிரண்டுபோன தளபதி விஜய் உடனடியாக லோகேஷ் கனகராஜை கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கண்டிப்பாக இன்னொரு படம் இணைந்து செய்யலாம் என வாக்குறுதி கொடுத்துள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து என்ஜாய் பண்ணி உள்ளாராம் தளபதி விஜய்.
லோகேஷ் கனகராஜ் ஆடியோ விழாவில் கூறியதைப்போல தளபதி விஜய்யை இதுவரை இல்லாத ஒரு கோணத்தில் காட்டியுள்ளாராம். அதுமட்டுமில்லாமல் விஜய் மற்றும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் இதுவரை பார்க்காத அளவுக்கு மிரட்டலாக இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையெல்லாம் கேள்விப்பட்ட தளபதி ரசிகர்கள் படத்தை எப்போது பார்ப்போம் என ஆர்வமாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மாஸ்டர் படத்தை OTTயில் வெளியிட்டாலும் பரவாயில்லை என்கிற அளவுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.
