Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-copy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதே போஸ்டர்.. அதே டைட்டில்.. அடடா! மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய மாஸ்டர்

XB பிலிம்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் தளபதி 64 ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகின்றது. மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசை, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங் . விஜய்சேதுபதியும், அர்ஜுன் தாஸ் மாளவிகா மேனன் , சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, தீனா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை வெகு பிரபலமானது. மேலும் அனைவரும் மாஸ்டர் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் போஸ்டர் 2012 ஆம் ஆண்டு வெளியான த மாஸ்டர் என்ற ஆங்கிலப் படத்தின் சாயலில் உருவாகியுள்ளது நெட்டிசன்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது முதலில் விஜய் விரும்பத்தகாதவர்கள்தான் உருவாக்கியதாக நினைத்தனர்.

ஆனால் உண்மையிலேயே த மாஸ்டர் எனப்படும் ஆங்கில படம் 2012 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளதைக் கண்டு தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விஜய்யின் மாஸ்டர் படத்தின் போஸ்டரில் விஜய் கலங்கிய நிலையில் உள்ளவாறு காட்டப்பட்டுள்ளது. இதேபோல் ஒரு போஸ்டர் ஆங்கில படத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.

the-master

the-master

இது தளபதி விஜய் போதையில் இருப்பதை கணிக்கும் வகையில் அமைந்தது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படம் முழுவதும் போதை மருந்துகளை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கதை காபியில் சிக்கியிருந்த விஜய்யின் படங்களுக்கு மேலும் சோதனை செய்யும் வகையில் மாஸ்டர் படத்தின் போஸ்டரும் காப்பியாக இருப்பதால் படக்குழு சற்று அப்செட்டில் உள்ளது.

என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top