தற்போது, டோலிவுட்டில் முன்னணி ஸ்டார்களில் ஒருவரான மகேஷ் பாபு நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இந்நிலையில், மீடியாவிற்கு மகேஷ் பாபு அளித்துள்ள பேட்டியில், விஜய் எனக்கு மிக நெருங்கிய நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் சார் படமாக்கத் திட்டமிட்டிருந்தபோது, அதில் விஜய்யுடன் நானும் சேர்ந்து நடிக்க கமிட்டாகியிருந்ததால் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தேன். ஆனால், சில காரணங்களால் திடீரென அப்படம் ட்ராப்பாகி விட்டது.

பின், இப்போ உள்ள காலகட்டத்தில் நானும் விஜய்யும் இணைந்து நடிக்கவுள்ள படத்தின் கதை ரொம்ப முக்கியம். அதுமட்டுமின்றி, எங்கள் இருவரையும் வைத்து திறமையாக ஹேண்டில் பண்ணக் கூடிய இயக்குநர் வேண்டும். எனக்கு தெரிஞ்சு எங்கள் இருவரையும் வைத்து இயக்கக்கூடிய பவர் ஏ.ஆர்.முருகதாஸ் சாரிடம் தான் உள்ளது என மகேஷ் பாபு கூறியுள்ளார்.

விரைவில் இந்த கூட்டணி அமைந்தால், நிச்சயம் அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸை வசூல் சுனாமியால் அடித்துச் செல்லப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘ஸ்பைடர்’ படத்தைத் தொடர்ந்து ‘விஜய் 62’­வை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.