Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய்யுடன் நடித்த குள்ளமான நடிகரின் மகள் புகைப்படம்.. அவருடைய உயரத்தை பாருங்க.. படு வைரல்

pakru-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யுடன் நடித்த குள்ளமான நடிகரின் மகள் புகைப்படம்.. அவருடைய உயரத்தை பாருங்க.. படு வைரல்

உலகிலேயே மிக குள்ளமான மனிதர் ஒரு முழுநீள படத்தில் நடித்ததற்காக கின்னஸ் விருது பெற்ற நடிகர் பக்ரு(Guinness Pakru). அடிப்படையில் மலையாள நடிகரான இவர் தமிழிலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

பக்ரு ஜீவாவுடன் நடித்த டிஷ்யூம், தளபதி விஜய்யுடன் நடித்த காவலன், சூர்யாவுடன் ஏழாம் அறிவு, அற்புத தீவு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் குட்டியும் கோலும் என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு காயத்ரி என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பக்ருவுக்கு ஒரு மகள் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பக்ரு ஹீரோவாக நடித்து வரும் இளையராஜா படத்தின் படப்பிடிப்பிற்கு தனது மகளை அழைத்து வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டனர்.

அப்பாவை விட உயரமாக வளர்ந்து உள்ள அவரது மகளின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழில் இறுதியாக விஜய் நடிப்பில் உருவான காவலன் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் வேறு எந்த படமும் நடிக்கவில்லை.

pakru-daughter

pakru-daughter

மலையாளத்தில் கலக்கி வரும் பக்ரு விரைவில் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top