இளைய தளபதி விஜய் தன் ரசிகர்களுக்காக எத்தன ரிஸ்க் வேண்டும் என்றாலும் எடுப்பார். இந்நிலையில் அடுத்து இவர் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.

இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து சம்மந்தப்பட்ட கதைக்களம் என நாம் முன்பே கூறியிருந்தோம்.

விஜய் கிராமத்து கதைகளில் நடிப்பது இதுவே முதன் முறையாம், கடந்த சில வருடங்களாக நகர்ப்புற கதையில் மட்டும் நடித்து வந்த விஜய்க்கு இந்த படம் வேறு ஒரு தளமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.