Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-shankar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் பிளாப் பட நடிகரை வில்லனாக்க துடிக்கும் சங்கர்.. பிரம்மாண்டத்திற்கு பலன் கொடுக்குமா?

விஜய் படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் ஒருவரை ஷங்கர் தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க ஆர்வமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இயக்குனர் ஷங்கர் எப்போதுமே தன்னுடைய படங்களில் பிரமாண்டங்களை புகுத்தி படம் பார்க்கும் ரசிகர்களை பிரமிக்க வைப்பார். ஒவ்வொரு காட்சிகளும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என ஏகப்பட்ட செலவுகள் செய்வார்.

ஷங்கர் படங்களில் தயாரிப்பாளர்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டு விடுகிறது என பலரும் புலம்பி வருகின்றனர். இருந்தாலும் ஷங்கருக்கு பட வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பெரிய படம் பண்ணி பெரிய லாபம் சம்பாதிக்க வேண்டும் என எண்ணும் தயாரிப்பாளர்கள் அனைவரின் ஒரே சாய்ஸ் ஆக இருப்பது சங்கர் தான். அந்தவகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளாராம் சங்கர். கிச்சா சுதீப் ஏற்கனவே விஜய் நடித்த புலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.

இருந்தாலும் தெலுங்கில் அவர் நடித்த நான் ஈ திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான கதாபாத்திரம் ரசிகர்களை அதிர வைத்தது. அதுமட்டுமில்லாமல் இந்திய அளவில் பிரபலமான முகம் என்பதால் படத்தின் வியாபாரத்திற்கும் உதவும் என கிச்சா சுதீப்பை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் ஷங்கர்.

kiccha-sudeep-cinemapettai

kiccha-sudeep-cinemapettai

Continue Reading
To Top