Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் கேரளாவில் கொடி நாட்டியது எந்த படத்தின் மூலம் தெரியுமா? தளபதியின் தாறுமாறு ஹிட் படம்தான்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக படுவேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான இவரது படங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட 250 கோடிக்கு மேல் வசூல் செய்து பிரம்மிக்க வைக்கிறது.
ஒரே மொழியில் வெளியாகும் படங்கள் இத்தகைய வசூல் பெறுவது சாத்தியமில்லை என்பதை சாத்தியம்தான் என படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார். இனிவரும் விஜய்யின் படங்கள் பேன் இந்தியா படமாக உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தமிழகத்தில் எந்த அளவு தளபதி விஜய்க்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதே அளவுக்கு நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் இருப்பது அனைவரும் அறிந்ததே. கேரளாவில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களை போல தளபதி விஜய்யின் படங்களை கொண்டாடித் தீர்த்து விடுவார்கள் அவரது ரசிகர்கள்.
ஆனால் இத்தகைய கூட்டமும் குடும்பம் குடும்பமாக ரசிகர்களும் சேர்ந்தது விஜய்யின் எந்த படத்தில் தெரியுமா? 2007 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளிவந்த போக்கிரி படத்தின் மூலம்தான். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருந்தாலும் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதில் விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குகள் இன்றும் ரசிகர்களுக்கு ஃபேவரிட். முதன்முதலில் கேரளாவில் மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது விஜய்யின் இந்த படம் தானாம். அதுவரை தமிழ் படங்கள் வெளியாகி நாளும் விஜய்யின் போக்கிரி படம் தான் கிட்டத்தட்ட ஏழு கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்ததாம்.
சமீபகாலமாக வெளியாகும் விஜய் படங்கள் 20 கோடி அளவுக்கு கேரளாவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. அன்னைக்கு ஆரம்பித்ததுதான் இந்த தளபதி சரித்திரம், இன்றுவரை குறையவில்லை என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம்.
