fbpx
Connect with us

விஜய்க்கு தோல்வி படங்கள், அஜீத்துடன் வெற்றி கூட்டணி அமைத்த இயக்குனர்.. வருத்தப்படாமல் வாழ்த்து தெரிவித்த தளபதி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கு தோல்வி படங்கள், அஜீத்துடன் வெற்றி கூட்டணி அமைத்த இயக்குனர்.. வருத்தப்படாமல் வாழ்த்து தெரிவித்த தளபதி

தமிழ் சினிமாவில் தல, தளபதி என்றுமே சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டிய அளவுக்கு சமீபகாலமாக வெற்றிப் படங்களை மாறி மாறி கொடுத்து வருகின்றனர். இன்னும் சொல்ல வேண்டுமானால் இவர்களின் சுமாரான படங்கள் கூட ரசிகர்கள் ஆதரவால் சூப்பர் ஹிட்டாகி விடுகிறது.

அதேபோல் அஜீத்-விஜய் படங்கள் ஒரு காலத்தில் நேரடியாக மோதிக் கொண்டாலும் சமீபகாலமாக அப்படி ஒன்றும் பெரிய அளவில் போட்டிகள் இல்லை. கடைசியாக இருவரும் ஒரே தேதியில் வெளியிட்ட படங்கள் என்றால் ஜில்லா மற்றும் வீரம் தான்.

இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டது. அதற்கு முன் வெளியான விஜய் அஜித் படங்களில் பெரும்பாலும் விஜய்யே முன்னிலை பெற்று இருந்தார். இருந்தாலும் அதெல்லாம் தற்போது செல்லுபடியாகாது என்பதை போல இருவரும் மாஸ் வெற்றிகளை குவித்து வருகின்றன.

விஜய்க்கு அழகிய தமிழ்மகன், பைரவா என இரண்டு தோல்வி படங்களை கொடுத்தவர் தான் பரதன். மேலும் விஜய்யின் கில்லி, மதுர போன்ற படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். விஜய்யுடன் இவர் கூட்டணி அமைத்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

ஆனால் அஜித்துடன் இவர் இணைந்து வசனம் எழுதிய வீரம் படம் பெரிய வெற்றியை பெற்றது. தனக்கு தோல்வி படங்கள் கொடுத்த இயக்குனர் என ஒதுக்கி வைக்காமல் தல அஜித்தின் வீரம் படத்திற்கு அருமையாக வசனம் எழுதியதாக தளபதி பரதனை கூப்பிட்டு பாராட்டியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top