Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரட்டை கதாபாத்திரத்தில் விஜய்யா?. ரசிகர்களை குழப்ப லோகேஷ் வச்ச 5 சீக்ரெட்

லோகேஷ் கனகராஜ் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விஜய், லோகேஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் தளபதி 67 படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த டைட்டில் வீடியோ லோகேஷ் ஸ்டைலில் அனைவருக்கும் பிடித்தபடி இருந்தாலும் சில குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது லியோ படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா என்ற குழப்பம் உள்ளது. ஏனென்றால் டைட்டில் வீடியோவில் ஒரு விஜய் சாக்லேட் செய்வது போலும், மற்றொரு விஜய் கத்தி செய்வது போலும் காண்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும்இன்றி இருவருமே வேறு விதமான தோற்றத்தில் உள்ளனர்.

Also Read : ரிஸ்கெல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி.. ஆடியன்ஸ் பல்ஸை பிடிக்க தளபதி 67-ல் லோகேஷ் எடுக்கும் சிரமம்

இதைத்தொடர்ந்து விக்ரம் ஸ்டைலில் இந்த வீடியோ இருப்பதால் அந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் இடம்பெறுவார்களா என்ற யோசனையும் ஏற்பட்டுள்ளது. மேலும் மிருகங்களை பிடிப்பதற்காக கன்னி வைப்பது போல் ஆட்களை கொல்கிறார்கள்.

கடைசியாக லியோ என்ற டைட்டில் சிம்ம ராசியை குறிப்பிடுவதால் இது சம்பந்தமான காட்சிகள் படத்தில் இடம்பெருமா அல்லது விஜய்யின் பெயர் லியோவா என்பது தெரியவில்லை. மேலும் ஒரு விஜய் மிகவும் மென்மையான கதாபாத்திரமாகவும், மற்றொரு விஜய் துணிச்சலான கதாபாத்திரமாக இருப்பதாக தெரிகிறது.

Also Read : திரிஷாவை ஓரம்கட்ட வரும் ஏஜென்ட்.. தளபதி 67 மிரட்டும் கதாபாத்திரம்

இப்படத்தில் விஜய் 50 வயது முதியவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. பிளாஷ்பேக் காட்சிகளில் அவர் சாக்லேட் செய்பவராக இருக்கும்போது அவரது குடும்பத்திற்கு ரவுடிகளால் ஏற்படும் பிரச்சனையால் விஜய் வேறு விதமாக மாறுவது போல் கதை இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் படத்தில் நிறைய வில்லன் நடிகர்கள் நடிப்பதால் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது. அதுமட்டுமின்றி படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் முதல் ரிலீஸ் தேதி வரை இப்போதே லோகேஷ் எல்லாத்தையும் வெளிப்படையாக கூறியதால் லியோ படத்தினுள் நிறைய சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

Also Read : அப்ப புரியல, இப்ப புரியுது.. யாரும் எதிர்பார்க்காத தளபதி 67 டைட்டில் இதுதான்

Continue Reading
To Top