Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்னது! பிகில் இந்த படத்தின் காப்பியா? அட்லீ சொல்லப்போகும் பதில் என்ன
தளபதி விஜய்யின் படங்களுக்கு சமீபகாலமாக பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதில் முக்கியமாக கருதப்படும் பிரச்சனை என்னவென்றால் கதை திருட்டு என்பது தான். அட்லீ முதல் ஏ.ஆர். முருகதாஸ் வரை இந்த பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளனர்.
விஜய்யின் சர்க்கார் படம் முழுக்க முழுக்க கதை திருட்டு தான் என எழுத்தாளர் சங்க தலைவர் பாக்கியராஜ் குற்றம்சாட்டினார் என்பது அனைவரும் அறிந்த கதைதான்.
அதேபோல் விஜய்யை வைத்து அட்லீ இயக்கும் ஒவ்வொரு படமும் பழைய தமிழ்ப் படங்களின் கதைகளை சார்ந்து இருப்பதால்அட்லீக்கு திருட்டு பட்டம் கட்டியது ஒரு குரூப். இதனைத் தொடர்ந்து வருகின்ற தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் பிகில் படம், ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த சக்தே இந்தியாவின் காப்பிதான் என செய்திகள் சமூக வலைதளங்களில் உலாவி வருகின்றன.
இது குறித்து பிகில் படதயாரிப்பாளரின் சமீபத்திய பேட்டியில், இது முழுக்க முழுக்க அட்லீயின் தனித்துவமான கதை. சக்தே இந்தியா படத்தின் காப்பி ரைட்ஸ் எங்களிடம் இல்லை என்றும் இது அனைத்துமே ஒரு வதந்தி என்றும் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஆனால் இது குறித்து அட்லீ தொடர்ந்து மவுனம் காத்து வருவது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
