முதல் முறையாக ஒரு தொகுப்பாளராக களமிறங்கி, நடிகர் கமலஹாசன் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும், பிரபலங்களிடமும் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பை பெற்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பமானபோது, தமிழ் திரையுலகை சேர்ந்த 14 பிரபலங்களும், ஜல்லிக்கட்டில் பிரபலமான ஜூலி உட்பட 15 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், வாரம் ஒரு நபர் எலிமினேட் செய்யப்படுவார் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதி. இந்நிலையில் இது வரை அனுயா, ஸ்ரீ ராம், கஞ்சா கருப்பு, ஆர்த்தி, பரணி என மேலும் பல  பேர் வெளியேறியுள்ளனர்.

இன்னும் 5 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் உள்ளனர். அடுத்ததாக யார் இதில் இருந்து வெளியேற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பும் அதிக அளவில் ரசிகர்களிடம் உள்ளது.

இந்த நிகழ்ச்சில் கலந்து கொண்டதற்காக போட்டியாளர்களுக்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டாலும் இவர்கள் ஜெயித்தால் இவர்களுக்கு என்ன பரிசு கிடைக்கும் எவ்வளவு பரிசு தொகை கிடைக்கும் என்கிற எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில்.

அதிகம் படித்தவை:  வசூலில் ​தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸை திணற திணற அடிக்கும் மெர்சல்!

ஒருநாள் நள்ளிரவு ஓவியாவை உசுப்பேற்றி திட்டி வந்த காயத்ரி, வின்னர் அவங்கதான்.. 50 லட்சத்தை வாங்காமல் போக மாட்டாங்க என்று வாய் உளறி சொல்லிவிட்டார். இதில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிப்பவருக்கு 50 லட்சம் பரிசு ரொக்க தொகையாக வழங்க உள்ளது தெரியவந்துள்ளது. biggboss நிகழ்ச்சி முடிவுக்கு வரபோகிறது.இதற்காக போராடி வருகின்றனர்.

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது, இந்த வாரம் ஞாயிற்று கிழமை 100-வது நாளை மிக பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது, இந்த 100-வது நாள் விழாவிற்கு தளபதி விஜய் சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளதாகவும் வெற்றியாளர்க்கு பரிசை வழங்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

மேலும் அதுமட்டுமில்லாமல் பல திரையுலக பிரபலங்களுக்கு கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது, இருப்பினும் விஜயின் வருகை பற்றிய தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  புலி படத்துக்காக பணத்தை அள்ளிக்கொடுத்த டி.ஆர்- வெளிவந்த உண்மை தகவல்

விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவரபோகும் படம் மெர்சல் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

’மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம் என்பதால் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில்,  மெர்சல் படத்தின் டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மாபெரும் கொண்டாட்டத்தை கொண்டாடினார்கள்.