Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யின் 50வது படமான சுறாவுக்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் இதுதான்.. பஞ்சாயத்துக்கு பயந்து மாத்திட்டாங்களாம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் உள்ள நடிகரும் இவரே.
இருந்தாலும் விஜய்யின் ஒவ்வொரு பட வெளியீட்டிற்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. அதுவும் சமீபத்தில் வந்த மெர்சல், சர்கார், பிகில் போன்ற படங்கள் பல பிரச்சனைகளில் மாட்டி சின்னாபின்னமானது.
தளபதி விஜய்க்கு சமீபத்தில் மட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களாகவே அவரது ஒவ்வொரு பட வெளியீட்டிற்கும் பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் தளபதி விஜய்யின் 50வது படமான சுறா படத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்புகள் இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இருந்தாலும் படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என நினைத்த நேரத்தில் படுதோல்வி அடைந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. குறிப்பாக விஜய்யின் ரசிகர்கள் மிகவும் நொந்து போனர்.
விஜய்யின் ஐம்பதாவது படமான சுறாவுக்கு முதல் முதலில் வைக்கப்பட்ட டைட்டில் நம்ம வீட்டு பிள்ளை என்பதுதானாம். அப்போது அரசியலில் நுழைவதற்கு அடித்தளம் போட்டுக்கொண்டிருந்த விஜய் முதலில் இந்த டைட்டிலை தான் தேர்வு செய்தாராம்.
மீனவர் வாழ்க்கை கதையாக வந்திருந்த சுறா படத்திற்கு படகோட்டி போன்ற தலைப்புகளும் பரிசீலனையில் இருந்தது. விஜய் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
பின்னர் கடைசி நேரத்தில் படத்தின் டைட்டிலை சுறா என மாற்றி விட்டார்களாம். இதனை படத்தின் இயக்குனரான ராஜ்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். பின்னர் 2019ஆம் ஆண்டு இதே தலைப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
