பிக்பாஸ்க்கு பின் சஞ்சீவை பற்றி வாயை திறந்த தளபதி.. அதகலப்படுத்திய பேட்டி!

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நடிகர் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார். இவர்  தொடக்கத்திலிருந்தே வந்திருந்தால் நிகழ்ச்சி இன்னும் சூடு பிடித்து இருக்குமே என்று ரசிகர்கள் பலரும் ஆதங்கப்பட்டனர். இருப்பினும் 50 கடந்த பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சஞ்சீவ் தன்னுடைய நேர்மையான நியாயமான விளையாட்டை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தவர்.

எனவே பிக்பாஸ் போட்டியாளர்களுள் சென்டிமென்ட் ஆளாக இருந்த சஞ்சீவ் டைட்டில் வின்னர் ஆவதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் குடும்பம் வீட்டிற்குள் வரும்போது பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு தீவிரமாக விளையாடினார். அதனாலோ என்னவோ அவரது குடும்பம் வந்த அடுத்தவாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன்பே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலமாகவும் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராக அறியப்பட்டவர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பு சஞ்சீவ் இதுகுறித்து விஜய்யிடம் தெரிவித்தபோது, ‘பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போய் சமாளித்து விடுவாயா?’ என்று கேள்வி கேட்டாராம்.

அதற்கு சஞ்சீவ், ‘கூப்பிடுறாங்க போய்தான் பார்ப்போம். என்ன நடக்கும் என்று’ என பதிலளித்துள்ளார். அதன் பிறகு தளபதி விஜய் ‘எதற்காக கூப்பிடுறாங்க அங்கு போய் நீ என்ன செய்ய நினைக்கிறாய்’ என்றும் கேட்டுள்ளார். அதற்கு சஞ்சீவ் ‘முடிந்தவரைக்கும் ஜாலியாக இருந்து விட்டு ஏதாவது பிரச்சனை வந்தால் களத்தில் இறங்க வேண்டும்’ என்றும் துணிச்சலுடன் பதிலளித்துள்ளார்.

பிறகு விஜய் ‘உனக்கு என்ன தோணுதோ அதை சிறப்பாக செய்து ஒரு கலக்கு கலக்கி விட்டு வா. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். இவ்வாறு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பு பேசிய தளபதி விஜய் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த சஞ்சீவ் இடம், ‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே எப்படி போனாய் என்பதைவிட, நீ வெளியே வரும்போது நல்ல பெயருடன் வெளியே வந்திருக்கிறாய்.

பிக்பாஸில் நீ கலந்து கொண்டதனால் நானும் அந்த நிகழ்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பார்க்க தொடங்கினேன். உன்னுடைய விளையாட்டு சிறப்பாக இருந்தது’ என்று சஞ்சீவ் இடம் விஜய் பேசியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்