Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் மண்டையைக் கழுவும் அட்லீ.. உன்னோட சாவுகாசமே வேணாம், ஆள விடு சாமி என துரத்தி விட்ட தளபதி!
தளபதி விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து மூன்று படங்களில் தொடர்ந்து கமிட்டாகியுள்ளார். அடுத்தடுத்த தயாரிப்பாளர்கள் முதல் இயக்குனர்கள் வரை தேர்வு செய்துவிட்டார்.
தளபதி65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமும், தளபதி66 படத்தை தேனாண்டாள் நிறுவனமும், தளபதி67 படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளனர். இந்த மூன்று படங்களுக்கும் புதிய இயக்குனர்களை போடுவதில் தீர்மானமாக இருக்கிறார் தளபதி விஜய்.
அந்த வகையில் தளபதி65 படத்தை சுதா கொங்கரா இயக்க இருந்த நிலையில் திடீரென முளைத்த காளானாக வந்தார் முருகதாஸ். வேறு வழியில்லாமல் அவரை கூட்டு சேர்த்துக்கொண்டார் தளபதி விஜய். ஆனால் தளபதி66, 67 படத்திற்கு புதுமுக இயக்குனர்கள் தான்.
இங்குதான் அட்லீக்கு குறுக்கு புத்தி வேலை செய்துள்ளது. முருகதாசுக்கு விஜய் வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக அட்லி தனக்கும் விஜய் வாய்ப்பு கொடுப்பார் என அவரை தொடர்ந்து கதை சொல்கிறேன் என தொந்தரவு செய்து வந்துள்ளார்.
மேலும் பிகில் படத்தில் வந்த ராயப்பன் கதாபாத்திரத்தின் அடிப்படையாக கொண்டு பிகில்-2 கதையை ரெடி என விஜய்யிடம் சொல்வதற்காக தொடர்ந்து அவருக்கு போன் செய்து வருகிறாராம். ஆனால் தளபதி விஜய், அட்லீ படங்களில் நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டவில்லையாம்.
இருந்தாலும் மரியாதைக்கு போன் பேசிவிட்டு கட் செய்து விடுகிறாராம். எப்படியாவது தளபதி விஜய்க்கு இந்த கதையை சொல்லி அடுத்த படத்துக்கு கமிட் ஆகி விடவேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் அட்லி. சாருக் கான் படம் கைநழுவி போனதால் வேறு எந்த படமும் இல்லை.
அதேநேரத்தில் அட்லியை வைத்து படம் இயக்க எந்த ஒரு தயாரிப்பாளர்களும் ரெடியாக இல்லை. வேண்டுமென்றால் சொந்த தயாரிப்பில் படங்களை இயக்கி கொள்ளட்டும் என அனைத்து தயாரிப்பாளர்களும் புறக்கணித்து விட்டார்கள்.
தளபதி விஜய்க்கு ஐஸ் வைத்து அவரது படங்களை இயக்கும்போது தயாரிப்பாளர்கள் காசில் மனைவியை கூட்டிக்கொண்டு ஊர் சுற்றியது, மேலும் 25 முதல் 30 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.
தற்போது மொத்தத்துக்கும் ஆப்பு விழுந்துள்ள நிலையில் என்ன செய்வது என்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாராம். இதனால் சிவகார்த்திகேயனை போல் குறைந்த பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கலாமா எனவும் யோசித்து வருகிறாராம்.
