இளையதளபதி விஜய் காவி வேட்டி அணிந்து, முகத்தை காவித் துண்டால் மறைத்துக் கொண்டு பழனி முருகனை தரிசனம் செய்துள்ளார். இளைய தளபதி விஜய் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் எனவும், தான் சாமி தரிசனம் செய்வது யாருக்கும் தெரிந்து கூட்டம் கூடிவிடாமல் இருக்க முகத்தில் காவித் துண்டை கட்டிச் சென்றுள்ளார் எனவும் செய்தி பரவியது.

காவி வேட்டி ஊதா கலரு சட்டை அணிந்து காவித் துண்டால் முகத்தை மறைத்தபடி விஜய் கோவிலில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

முன்னதாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் புரட்சி செய்தபோது அவர்களை ஆதரித்து கடற்கரைக்கு சென்றார் விஜய். தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க துண்டால் முகத்தை கட்டியிருந்தார் ஆதலால் அதை போலவே இருந்த இவரும் அவர்தான் என ஊர் உலகம் நம்பியது. ஆனால், வந்தது விஜய் இல்லையாம், ரசிகர் ஒருவர் விஜய் போலவே கெட்டப் செய்துக்கொண்டு வந்துள்ளார், அது விஜய் என வைரலாகியுள்ளது.