Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிப்பு வரலைன்னாலும் கவர்ச்சி காட்டுவதால் பிரபல நடிகைக்கு கொட்டும் பட வாய்ப்புகள்.. கார்த்தியுடன் அடித்த ஜாக்பாட்
அறிமுகமே இல்லை என்றாலும் முதல் பட வாய்ப்பு சூப்பர் ஸ்டாருடன் கிடைத்ததால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து மற்ற நடிகைகளை கலக்கமடைய வைத்தவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார்.
அதன்பிறகு யாரும் எதிர்பாராத வகையில் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடி போட்டது மற்ற நடிகைகளை கலக்கமடைய வைத்தது.
அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்தடுத்து சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வாய்ப்பை பெற்று அசத்தினார். நடிப்பே வராத நடிகைக்கு இப்படி பட வாய்ப்புகள் குவிகிறதே என கோலிவுட் வட்டாரமே ஆச்சரியத்தில் உள்ளது.

malavika-mohanan-new-movie
தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தில் மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மிகக் குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு மற்ற முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி தற்போது முன்னிலையில் இருக்கிறார் மாளவிகா மோகனன்.
எல்லாத்துக்கும் மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படங்கள் தான் காரணம் என மற்ற நடிகைகளும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட ஆயத்தம் ஆகி விட்டதாக தெரிகிறது. எப்படியோ ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
