Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் செய்யும் புதுமை புரட்சி.. இது தொடர்ந்தால் நாடு சொர்கம்தான்
விஜய் செய்யும் புதுமை புரட்சி
தமிழ் சினிமாவின் மன்னராக தற்போது விளங்குபவர் நடிகர் விஜய். விஜய் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் சமூக கருத்துக்களை கொண்ட வசனங்களும் இடம்பெற்றிருக்கும். விஜய்க்கு சிறுவர் முதல் பெரியோர் வரை ரசிகர்கள் உள்ளனர். விஜயின் படம் வெளிவரும் பொழுது ரசிகர்க குடும்ப ரசிகர்கள் அதிகம் பார்ப்பார்கள். விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
விஜய் தன் ரசிகர்களை மக்களுக்கு உதவி செய்யுமாறு கூறியுள்ளார். அதனை ஏற்ற ரசிகர்கள் மக்களுக்கு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், பேனா பென்சில் போன்றவை உதவி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ரத்த தானம் போன்ற உயிர் காக்கும் உதவிகளையும் செய்து வருகின்றனர். தற்போது தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் பைகளை தடை செய்துள்ளது.
அதனால் விஜய் ரசிகர்கள் விஜயின் படம் பொறிக்கப்பட்ட பைகளை கடை உரிமையாளரிடம் கொடுத்து. இது மக்களுக்கு கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால் கடை உரிமையாளர்கள் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது மட்டுமில்லாமல் மக்களுக்கு இதனை உதவி செய்கிறோம் என கூறியுள்ளனர்.
மற்ற ரசிகர்கள் ஏதேதோ சாதனை படைத்து வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் மட்டுமே இந்த மாதிரியான நல்ல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை பார்த்த மக்கள் எதிரிகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவை அனைத்தும் விஜய் கவனத்துக்கு சென்று ரசிகர் மன்றம் மூலம் மேலும் தொடர சொல்லியுள்ளாராம்.
தளபதி ரசிகர்களை நினைக்கவே பெருமையா இருக்கு..??#ThalapathyVijay #sarkar pic.twitter.com/WrNtbdmX7M
— ??அகில இலங்கை விஐய் நற்பணி மன்றம் ?? (@SLVFC_Official) January 4, 2019
