Vijay Theriமான் கராத்தே, ராஜா ராணி, ரஜினி முருகன் என பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக வேலை செய்தவர் சத்யா. தற்போது தெறி படத்திலும் பணியாற்றிவரும் இவருக்கு விஜய்யின் 60வது படத்திலும் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே விஜய்யால் தானாம்.

இதுகுறித்து அவர் பேசுகையில், தெறி படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்க்கு காஸ்ட்யூம் டிசைன் செய்தேன்.விஜய் காஸ்ட்யூம் டிசைன் பார்த்துவிட்டு இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனது அடுத்த படத்தில் நீங்கள் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றுகிறீர்களா? வேறு எதுவும் படம் ஒப்புக் கொண்டு இருக்கிறீர்களா? என்று கேட்டு என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டார் என சத்யா கூறியுள்ளார்.