தளபதிக்கு இப்படி ஒரு திறமையா? பிசிறு தட்டாமல் டீல் செய்யும் விஜய்

thalapathy-vijay-cinemapettai
thalapathy-vijay-cinemapettai

மொழி என்பதை தாண்டி சினிமா என்பது ரசிகர்கள் பொழுதுபோக்கும் ஒரு அம்சமாக உள்ளது. அதனால் இந்த மொழி என்று இல்லாமல் படம் நன்றாக இருந்தால் எந்த மொழியாக இருந்தாலும் ரசிகர்கள் அந்த படத்தை ரசித்து பார்க்கிறார்கள். அதனால் சினிமாவை பொருத்தவரை மொழி என்பது ஒரு தடையே அல்ல.

ஆனால் நடிகர்களுக்கு அப்படி அல்ல. ஏன் நடிகர்கள் அவர்களின் சொந்த மொழியை தவிர்த்து பிற மொழி படங்களில் நடிக்கும் போது அந்த மொழியில் பேச மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு சிலர் எளிதாக அந்த மொழியை கற்று கொள்கிறார்கள். ஆனால் சிலர் சற்று சிரமப்படுகிறார்கள்.

தற்போது தமிழ் நடிகர்கள் பிற மொழி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தளபதி விஜய்யும் இணைந்துள்ளார். இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

ஆனால் நடிகர் விஜய்க்கு தெலுங்கு மொழி சுத்தமாக தெரியாது. அதனால் அவர் அந்த மொழியில் எப்படி நடிப்பார் என பலரும் முழித்து வருகின்றனர். ஆனால் விஜய் அப்படி அல்ல எந்தவித படபடப்பும் இல்லாமல் மிகவும் கூலாக உள்ளாராம். மொழி தெரியாம அவர் எப்படி சமாளிக்க போகிறார் என்ற டென்சன் துளி கூட விஜய் முகத்தில் இல்லையாம்.

காரணம் அவரிடம் ஒரு சிறப்பம்சம் உள்ளதாம். அதாவது விஜய்க்கு எந்த மொழியாக இருந்தாலும் அந்த மொழியை மிகவும் ஈஸியாக கற்று கொள்ளும் திறமை உள்ளதாம். அதுமட்டுமல்ல அந்த மொழியில் எந்த பிசிறும் இல்லாமல் மிக அழகாக உச்சரிப்பாராம்.

அதனால் விஜய்யை பொருத்தவரை அவரது படத்திற்கு மொழி பிரச்சனை என்பது கிடையாது. நம்ம விஜய் கிட்ட இப்படி ஒரு திறமையா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயை பிளந்து வருகிறார்கள்.

Advertisement Amazon Prime Banner