அடுத்தடுத்து 5 இயக்குனர்களை புக்கிங் செய்த தளபதி விஜய்.. இதுல உங்களோட ஃபேவரிட் கூட்டணி யாரு?

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இதையடுத்து அவர் விஜய்யை வைத்து இயக்கப் போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த படத்திற்கு பிறகு விஜய், அட்லி இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களின் கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது.

இதையடுத்து விஜய், வெற்றிமாறன் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார். அதில் வெற்றி மாறனுடன் விஜய் முதன்முறையாக இணைய இருப்பதால் படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது விடுதலை மற்றும் வாடிவாசல் திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன் இந்த படங்களை எல்லாம் முடித்து விட்டு விஜய் உடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இடைவெளியில் விஜய்யும் கைவசமிருக்கும் திரைப்படங்களை முடித்துவிட்டு இந்த படத்திற்காக தயாராக இருக்கிறார்.

இப்படி அவரின் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வர இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -