புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

6 அடி KGF அரக்கனுடன் மோதப்போகும் விஜய்.. தளபதி-67 வில்லனாக மாறிய பெண்களின் ரொமான்டிக் ஹீரோ

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் தன்னுடைய 67 வது திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார். ‘பீஸ்ட் ‘ திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப கதைக்களம் கொண்ட திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

‘விக்ரம்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ‘கைதி 2’, ‘விக்ரம் 2′, இரும்புக்கை மாயாவி’ ‘தளபதி 67’ என நான்கு படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இதில் ‘தளபதி 67’ திரைப்படத்தை தான் லோகேஷ் கனகராஜ் முதலில் இயக்கவுள்ளார்.

எப்பொழுதும் வித்தியாசமாக கதைக்களத்துடன் படம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் திரையில் வெற்றிக்கொடி நாட்டின . சமீபத்தில் உலகநாயகனுடன் இவர் கைகோர்த்த விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்த சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இதனாலேயே ‘தளபதி 67’ ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் முதல் மோலிவுட் வில்லன்கள் களமிறங்கும் ‘தளபதி 67’: ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தில் பாஹத் பாசில், விஜய் சேதுபதி என மிகப்பெரிய ஜாம்பவான்களை கூட்டணி சேர்த்து வெற்றி கண்டார். தற்போது ‘தளபதி 67’ கேங்ஸ்டர் திரைப்பட கதைக்களம் கொண்டது எனவும், இதில் மொத்தம் 6 வில்லன்கள் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது வரை பான் இந்தியா திரைப்படமாக கொண்டாடப்படும் KGF -2 திரைப்படத்தின் வில்லன் சஞ்சய் தத், மற்றும் பன்முக திறமை கொண்ட மலையாள சினிமா உலகின் நாயகன் பிரித்விராஜ் ‘தளபதி-67’ திரைப்படத்தில் வில்லன்களாக தேர்வாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 4 வில்லன்களை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்கள்.

இதில் பிரிதிவிராஜ் ஒரு வில்லனாக களம் இறங்குவது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. அவருக்கு மலையாளத்தில் பெண்கள் ரசிகர்கள் ஏராளம். ஏற்கனவே தமிழில் கனா கண்டேன் என்ற படத்தில் வில்லனாக அசத்தியிருப்பார் பிருதிவிராஜ். இதற்கிடையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களிலிருந்து சிறிது காலம் விலகி இருக்க போவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்

- Advertisement -

Trending News