தளபதி டேக் ஓவர், விசில் போடு.. வெறித்தனமா வெளிவந்த கோட் ரிலீஸ் ப்ரோமோ

GOAT Release Promo: நாளை செப்டம்பர் 5 இந்த ஒரு நாளுக்காக தான் விஜய் ரசிகர்கள் பல மாதங்களாக தவம் இருந்து வந்தனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் கோட் நாளை ரசிகர்களின் பார்வைக்கு விருந்தாக வர இருக்கிறது.

ஏற்கனவே இதன் ட்ரெய்லர் பட்டையை கிளப்பிய நிலையில் இப்போது பட குழுவினர் திரும்பும் பக்கம் எல்லாம் எதிர்பார்ப்பை வாரி இறைத்து வருகின்றனர். மேலும் படத்தில் விஜயகாந்த் ஏஐ காட்சிகள் மற்றும் திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் கேமியோ என ஏகப்பட்ட சர்ப்ரைஸ் இருக்கிறது.

இது தவிர விஜய்யை எப்படி எல்லாம் ரசிகர்கள் திரையில் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டார்களோ அது அனைத்தும் கோட் படத்தில் இருக்கும் என்கின்றனர். அது மட்டும் இன்றி இதுவரை வந்த விஜய் படங்களில் நாம் ரசித்த சில வசனங்களும் இடம்பெறுகிறது.

தளபதியின் ஆக்சன் ட்ரீட்

மேலும் இடைவேளை காட்சி யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். நிச்சயம் 3 மணி நேர படத்தை ஆடியன்ஸ் என்ஜாய் செய்வார்கள் என வெங்கட் பிரபு உறுதி அளித்து உள்ளார்.

தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனாவும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ப்ரோமோஷன் செய்து வருகிறார். அதன்படி இன்று மாலை ரிலீஸ் ப்ரோமோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது அந்த வீடியோ காட்சிகளை கொண்டாடி வருகின்றனர்.

அதிலும் 34 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோ முழுக்க தளபதியின் ஆக்சன் ட்ரீட் தான். அதற்கேற்றவாறு இருந்த பின்னணி இசையும் கடைசியாக வரும் தளபதி டேக் ஓவர் என்ற வசனமும் வெறித்தனமாக இருக்கிறது என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கோட் படத்திலிருந்து வெளியான கடைசி அப்டேட்

Next Story

- Advertisement -