1500 கோடி வடை சுட்ட பிரேம்ஜி.. கோட் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

Vijay : வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் நேற்று வெளியான கோட் படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். வசூல் மன்னன் விஜய்யின் படங்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல ஓபனிங் கிடைப்பது வழக்கம் தான். அதுவும் கோட் படம் இன்னும் ஒரு சிறப்பான அனுபவத்தை கொடுத்தது.

ஏனென்றால் விஜய்யின் படங்கள் என்றாலே இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால் கோட் படத்தின் ப்ரோமோஷன் நடக்காத நிலையில் நிறைய ஊடகங்களில் இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படத்தைப் பற்றி சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருந்தனர்.

இதன் காரணமாக படத்திற்கான ஹைப் அதிகமாக இருந்தது. அதோடு கோட் படம் மட்டும் கிட்டத்தட்ட 5000 திரைகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் 380 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் ஏற்கனவே போட்ட பட்ஜெட்டை டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் ஆகியவற்றில் அள்ளிவிட்டது.

கோட் படத்தின் முதல் நாள் கலெக்ஷன்

இனி வருவது எல்லாமே லாபம் என்றாலும் முதல் நாள் வசூல் எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் கோட் படம் கிட்டத்தட்ட 43 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 38 கோடி வசூலித்துள்ளது.

விஜய்க்கு தமிழ்நாட்டை போலவே மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் தெலுங்கில் 3 கோடியும், மலையாளத்தில் 2 கோடியும், இந்தியில் 1.7 கோடியும் வசூல் செய்தது. விஜய்க்கு கோட் படம் நல்ல ஓபனிங் ஆகத்தான் அமைந்திருக்கிறது.

அடுத்தடுத்து வார இறுதி நாட்கள் என்பதால் கோட் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருபுறம் நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் நிலையில் பிரேம்ஜி 1500 கோடி வசூல் செய்யும் என்று ஊடகங்களில் வடை சுட்ட நிலையில் ஆயிரம் கோடியே வசூல் செய்யுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

வசூல் வேட்டையாடியதா கோட்

Next Story

- Advertisement -