Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி விஜய் இயக்கத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ்.. இதென்ன புது கதை
தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். தரலோக்கல் கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை தமிழ் புத்தாண்டு வெளியீடாக ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.
கத்தி படத்திற்கு பிறகு அனிருத் இசையமைக்கும் மாஸ்டர் படத்தின் குட்டிக்கதை பாடல் உலகமெங்கும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படப்பிடிப்பு தளபதி விஜய் வழக்கத்திற்கு மாறாக செம குஷியாக இருந்து உள்ளதாக படக்குழுவினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் மாஸ்டர் படத்தின் எழுத்தாளர் ரத்தினகுமார் ஆகிய இருவரும் ஒரு காட்சியில் வருவதைப்போல் படமாக்கியுள்ளனர். அந்த காட்சியை தளபதி விஜய் ஒரு நாள் முழுவதும் இயக்குனர் இருக்கையில் அமர்ந்து ரெடி டேக் ஆக்சன் எனக்கூறி இயக்கியதாக படக்குழுவில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் தளபதி விஜய் டெல்லி படப்பிடிப்பில் இருக்கும்போது படக் குழுவினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய செய்தி அப்போதே வெளிவந்த பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக தளபதி விஜய் படப்பிடிப்பில் ஜாலியாக இருப்பதாக விஜய்யின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
மாஸ்டர் படப்பிடிப்பில் வழக்கத்திற்கு மாறாக சின்ன குழந்தை போல் மிகவும் சந்தோசமாக இருந்ததாக மாஸ்டர் படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதால் அங்கு தளபதி விஜய் பற்றி நிறைய செய்திகள் கிடைக்கும் என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சீக்கிரம் தேதிய சொல்லுங்கப்பா.!
