இவ்வளவு சம்பளம் நம்மளால முடியாது.. விஜய் கால் சீட் கொடுத்தும் பின் வாங்கிய தயாரிப்பு நிறுவனம்

பொதுவாக பெரிய நடிகர்கள் என்றாலே ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்து இரண்டு மூன்று படங்கள் சம்பந்தமான விஷயங்களில் இறங்கி அதற்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள். அப்படித்தான் விஜய்யும் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே இவருடைய அடுத்த படத்திற்கான தளபதி 68 படத்தின் இயக்குனரை முடிவு செய்து விட்டார்.

தற்போது வந்த தகவலின் படி தளபதி 68 படத்தை இயக்குவது வெங்கட் பிரபு மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளராக ஏஜிஎஸ் நிறுவனம் உறுதியாகி உள்ளது. ஆனால் இப்படத்தை எப்படியாவது தயாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே விஜய் இடம் பேசி கால்ஷீட் வாங்கி இருக்கிறது ஆர் பி சௌத்ரி நிறுவனம்.

Also read: நா அவ்ளோ சேடிஸ்ட் இல்ல, மீடியாவில் விளக்கம் கொடுத்த லோகேஷ்.. லியோ-வில் உள்ள அல்டிமேட் சீன்

அதாவது இவர்கள் ஏற்கனவே விஜய் இடம் செண்டிமெண்டாக பேசி இந்த நிறுவனத்தின் நூறாவது படத்தை தயாரிக்கும் போது அது விஜய் உடைய படமாக தான் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதனால் விஜய்யும் மறுப்பு தெரிவிக்க முடியாமல் சம்மதம் தெரிவித்திருந்தார். அதற்கேற்ற மாதிரி கால் சீட்டையும் ஒதுக்கி கொடுத்திருந்தார்.

அதனால் தளபதி 68 படத்தை முதலில் ஆர்பி சௌத்ரி தான் தயாரிக்கப் போவதாக இருந்தது. இதுகுறித்து விஜய் பலமுறை இவர்களிடம் போன் பண்ணி கேட்டுள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த விதமான சரியான பதிலும் வரவில்லை. பிறகு என்னதான் பிரச்சனை என்று கேட்ட பொழுது எந்த கதையும் எனக்கு திருப்தி அளிக்காததால் எந்த இயக்குனரும் எனக்கு செட் ஆகவில்லை என்று சௌத்ரி கூறி இருக்கிறார்.

Also read: ஒன்னு இருக்கு ஆனா இல்ல.. லியோ படத்தில் பயங்கரமான புதிர்களை போடும் லோகேஷ் கனகராஜ்

அதன் பின் விஜய் சில இயக்குனர்களை சௌத்ரி இடம் அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் அவர் அனுப்பி வைத்த இயக்குனர்கள் எல்லாம் ரொம்பவே காஸ்ட்லியான இயக்குனர். அந்த இயக்குனர்கள் 25 கோடி முதல் 40 கோடி வரை சம்பளம் எதிர்பார்ப்பவர்கள். இந்த சம்பளத்தை கேட்டதும் இவ்வளவு சம்பளமா என்னால தாக்குப் பிடிக்க முடியாது என்று ஜகா வாங்கிட்டார்.

இதனால் விஜய்யை வைத்து படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்த ஆசை அப்படியே நிலுவையில் போய்விட்டது. விஜய் இவரிடம் கால் சீட் கொடுத்தும் ஆர்பி சௌத்ரி நிறுவனம் பின்வாங்கி விட்டது. இதனால் விஜய்யும் எஸ்கேப் ஆகிவிட்டார் என்றே சொல்லலாம். ஏனென்றால் இயக்குனர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவிற்கு யோசிக்கும் நிறுவனம் எப்படி விஜய் வாங்கும் சம்பளத்தை கொடுக்க முடியும். இதனால் இந்த முடிவு இப்படியே கைவிடப்பட்டது. அதன் பிறகு தான் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து விட்டார்.

Also read: வியாபாரத்திற்காக புதிய யுத்தியை கையில் எடுத்த லியோ படக்குழு.. பழைய சம்பவத்தை மறந்த லோகேஷ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்