Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் அளித்த பரிசு.. பிகில் படக்குழு இன்ப அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘பிகில்’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு என ஒரு பெரிய டீம் வேலை செய்கிறது.
பிகில் படத்தில், நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நடிகர் விஜய் பிகில் என்று பெயர் எழுதப்பட்ட மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. மேலும் இதுவரை படத்தை போட்டு பார்த்தவரை விஜய்க்கு முழு திருப்தியாம்.
Actor #Aathma Who acts as #ThalapathyVijay's Friend in #Bigil shares about his Nice gesture of Treating the Team with Gold Gifts ? #BigilDiwali@actorvijay @ActorAATHMA @Ags_production @Atlee_dir @archanakalpathi @Jagadishbliss @BigilOff. pic.twitter.com/DBHKZTGEzZ
— #BIGIL (@BigilOff) August 13, 2019
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
