சந்தோஷ் நாராயணனுக்கு இளையதளபதி விஜய் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார் அதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

விஜய் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார், பாடத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார், மேலும் இந்த படத்திலும் இசை புயல் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்கிறார் இவர் இதற்க்கு முன் மெர்சல் படத்தில் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கபாலி , காலா போன்ற படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாடும் சந்தோஷ் நாராயணனுக்கு இளையதளபதி விஜயிடமிருந்து சப்ரைஸ் பரிசு ஒன்று வந்துள்ளது. தனது கைப்பட கையெழுத்து போட்ட ஒரு கிரிக்கெட் பேட்டை விஜய் பரிசளித்துள்ளார். இதை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விஜய் அவர்களுக்கு மிகுந்த நன்றியை  தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.