Tamil Cinema News | சினிமா செய்திகள்
மொத்தமாக ஆளே மாறப்போகும் விஜய்.. இது வேற லெவல் இருக்கும்

மொத்தமாக ஆளே மாறப்போகும் விஜய்
விஜய் – அட்லி இணையும் மூன்றாவது படம் தளபதி63. இந்த படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தெறி, மெர்சல் படத்திற்கு பிறகு மிகவும் அதிக எதிர்பார்ப்போடு இருக்கும் படம் தளபதி63.
பேட்ட, விஸ்வாசம் படத்தின் அலைகள் அடித்து முடிந்தவுடன், இந்த மாத இறுதியில் அடுத்த அலை அடிக்கும் அதுதான் தளபதி63. படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் ஆரம்பிப்பதாக கூறுகிறார்கள்.
விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் ஸ்போர்ட்ஸ் கோச்சராக நடிக்கிறார், ஜோடியாக நயன்தாரா நடிப்பார் எனக் கூறுகிறார்கள்.
ஸ்போர்ட்ஸ் மேனாக விஜய் நடிப்பதால் இந்த படத்துக்கு கண்டிப்பாக பிட்னெஸ் தேவை அதற்காக விஜய் உடம்பை இன்னும் அதிகமாக ஏற்ற போகிறார். மேலும் சிக்ஸ் பேக் வைக்கும் அளவுக்கு கூட செல்வார் என்று சினிமா வட்டாரம் கூறுகிறது.
சூர்யா விக்ரமை தொடர்ந்து விஜய்யும் உடம்பை முறுக்கேற்ற களத்தில் இறங்கி இருக்கிறார்.
