fbpx
Connect with us

Cinemapettai

இந்திய அளவில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட தளபதி விஜய்.. முதலிடத்தை வளைத்துப் போட்ட பிரபல நடிகர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்திய அளவில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட தளபதி விஜய்.. முதலிடத்தை வளைத்துப் போட்ட பிரபல நடிகர்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தளபதி விஜய் பல வகைகளில் சாதனைகளை புரிந்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவை பொருத்தவரை நம்பர்-1 நடிகராக வலம் வருகிறார்.

கடந்த வருடத்தில் இவர் நடிப்பில் வெளியான பிகில் படம் 2019ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. வசூல் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் விஜயின் சாதனைகள் பட்டியலிட முடியாத அளவுக்கு அதிக அளவில் உள்ளன.

தற்போது மீண்டும் ஒரு சாதனையை இணையதளத்தில் செய்துள்ளார். தளபதி விஜய் சம்பந்தப்பட்ட செய்திகளை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் எப்போதுமே நம்பர் 1 ஆக்கிவிடுவார்கள். ஆனால் இந்த முறை ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள்.

தற்போது பல நடிகர்களை உருவாக்கிக் கொடுக்கும் சமூக வலைத்தளமாக இருக்கிறது டிக் டாக். அதில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பெயர்களில் மூன்றாவது இடம்(2.2B) பிடித்துள்ளார் தளபதி விஜய்.

ஆனால் இந்திய அளவில் முதல் இடத்தை சல்மான்கானும்(4.2B) இரண்டாவது இடத்தை ஷாருக்கானும்(2.6B) பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்திய அளவில் மூன்றாவது இடம் பிடித்து இருந்தாலும் தென்னிந்திய அளவில் நம்பர்-1 நடிகராக வலம் வருகிறார் தளபதி விஜய்.

தற்போது அனைவரும் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 15ஆம் தேதி நடக்க இருப்பதைத் தான். குட்டிக்கதை க்கு எல்லோரும் வெயிட்டிங் தானே!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top