புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

எல்லாமே ரசிகர்களுக்காகத்தான்.. தன்னுடைய ஆசையை விட்டுக் கொடுத்த விஜய்

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தில் ராஜு தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களால் நொந்து போயிருக்கும் அவருடைய ரசிகர்கள் இந்த படத்தை தான் முழுவதுமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

திரையுலகை பொருத்தவரை விஜய்க்கு தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்காக முழுவதுமாக மாற்றிக் கொண்ட ஒரு விஷயத்தைப் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது விஜய்க்கு கதை மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க வேண்டும் என்பது மிகுந்த ஆசையாம். அதாவது ஹீரோயிசம் இல்லாத மிகவும் எதார்த்தமான கதையில் நடித்து ஸ்கோர் செய்ய வேண்டும் என்பது அவருக்கு நீண்ட நாள் ஆசையாக இருக்கிறதாம்.

ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால் ஹீரோயிசம் இல்லாத திரைப்படத்தில் அவர் நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்காது. எனவே விஜய் குத்து பாட்டு, நடனம், சண்டை காட்சிகள் போன்றவை இருந்தால் தான் என்னுடைய ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று அது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம்.

இந்த விஷயத்தை பகத் பாசிலின் தந்தையும், இயக்குனருமான பாசில் தெரிவித்துள்ளார். இவர் விஜய்யை வைத்து காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு ஆகிய திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் செய்த இந்த விஷயம் அவருடைய ரசிகர்களை பூரிப்படைய வைத்துள்ளது.

- Advertisement -

Trending News