இயக்குனர்களுக்கு சூப்பர் அட்வைஸ் கொடுத்த விஜய்.. GVM செய்ய தவறியதால் வரப்போகும் பிரச்சனை

தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸ்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை.

இதனால் விஜய் இயக்குனர்களுக்கு ஒரு முக்கிய அட்வைஸ் கொடுத்துள்ளார். ஆனால் வெந்து தணிந்தது காடு படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இதை செய்ய தவறிவிட்டதாக கூறப்படுகிறது. மாநாடு வெற்றியை தொடர்ந்து சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.

Also Read :நீங்க அப்படி செஞ்சா, நாங்க இப்படி செய்வோம்.. விஜய்க்கு போட்டியாக விஜய் டிவி பிரபலங்கள் செய்த காரியம்

வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் உலக நாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்நிலையில் வலிமை, விருமன், கோப்ரா போன்ற படங்களுக்கு ரசிகர்களிடமிருந்து அதிக நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் நீளம் அதிகமாக இருப்பது தான். இந்த படங்கள் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக ரன்னிங் டைம் உள்ளது.

Also Read :ரெட் ஜெயன்டை அசிங்கப்படுத்திய படக்குழு.. மொத்தமும் சொதப்பலாய் நடந்த வெந்து தணிந்தது காடு பங்க்சன்

இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீது எரிச்சல் வருகிறது. இதை கருத்தில் கொண்டு புது இயக்குனர்களுக்கு 2.15 இருந்து 2.30 மணி வரை படத்தின் நீளம் இருந்தால் போதும் என்பது போல விஜய் அறிவுரை கூறியுள்ளார். ஆனால் வெந்து தணிந்தது காடு படத்தின் ரன்னிங் டைம் 3 மணி 10 நிமிடங்கள்.

ஏற்கனவே கோப்ரா படத்திற்கு படத்தின் நீளம் குறித்த விமர்சனங்கள் வந்ததால் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் நீளமும் அதிகமாக இருப்பதால் படம் வெற்றி பெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read :கோடிகளில் சம்பளம் வாங்கியும் பிரயோஜனமில்லை.. கௌதம் மேனன் கடனை வைத்து விளையாடும் தயாரிப்பாளர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்