புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

காவிரிக்கு மறக்க முடியாத பிறந்தநாள் கிப்ட் கொடுத்து அசத்திய விஜய்.. மனம் ஒத்தும் தம்பதிகளாக மாறிய VIKA

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், இந்த ஒரு நொடிக்காக தான் பல நாட்களாக காத்துக் கொண்டிருந்தோம் என்பதற்கு ஏற்ப விஜய் மற்றும் காவிரியின் சந்தோசமான தருணங்கள் நெருங்கி விட்டது. காவிரியின் பிறந்தநாளுக்கு விஜய் தொடர்ந்து சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக காவிரியின் குடும்பத்தில் இருப்பவர்களிடம் காவிரிக்கு என்னெல்லாம் பிடிக்கும். எதெல்லாம் கிடைக்காமல் போனது என்பதை தெரிந்து கொண்டார்.

அதெல்லாம் தெரிந்து கொண்ட விஜய், ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் விதமாக காவிரிக்கு பிடித்து விஷயங்களை எல்லாம் கிப்டாக கொடுத்து அசத்துவதற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் காவிரியை சர்ப்ரைஸ் ஆக அந்த இடத்திற்கு கூட்டிட்டு வந்து அப்பா வாங்கிட்டு வந்து கொடுத்த கொலுசு போல அதே கொலுசை கொடுத்து சந்தோஷப்பட்டு விட்டார்.

அத்துடன் அப்பா என்னெல்லாம் காவிரிக்கு பிடிக்கும் என்பதை தெரிந்து வாங்கிட்டு வந்த பலகாரங்கள் அனைத்தையும் காவிரிக்கு சர்ப்ரைஸ் ஆக கொடுத்து அசத்தினார். இதையெல்லாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத காவேரி சந்தோசத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்து போய்விட்டார். கடைசியில் இனிமேல் தான் மெயின் பிக்சர் இருக்கிறது என்பதற்கு ஏற்ப விஜய், பூ வாங்கிட்டு வந்து விட்டார்.

வாங்கிட்டு வந்த கையோடு காவிரி தலையில் அவரே வைத்து தினமும் இதே மாதிரி பூ வைக்க நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு ஏற்ப மனதில் இருக்கும் காதலை தெரியப்படுத்தி விட்டார். அந்த நொடியில் காவிரிக்கும் வேறு எந்த ஞாபகமும் இல்லை தன்னுடைய கணவர் விஜய் தனக்கு பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயங்களை செய்திருக்கிறார் என்ற நினைப்பில் விஜய் இடம் மொத்த அன்பையும் கொட்டி விட்டார்.

தற்போது இவர்கள் இருவரையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்பதற்கு ஏற்ப விஜய் மற்றும் காவிரி மனம் ஒத்தும் தம்பதிகளாக மாறிவிட்டார்கள். கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சர்ப்ரைஸையும் கொடுத்துவிட்டு காவிரி ஆசைப்பட்ட வீட்டையும் கிப்டாக கொடுக்கப் போகிறார். ஆனால் இவ்வளவு பெரிய சந்தோசத்தை மனதோடு வைத்திருக்கும் இவர்களுக்கு பேர் அதிர்ச்சியாக வரப்போவது வெண்ணிலா.

அதாவது இவர்கள் சந்தோஷத்தை கெடுக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கும் ராகினியின் ஏற்பாடு தான் வெண்ணிலா. ராகினி சொன்னபடி அஜய், வெண்ணிலாவை கண்டுபிடித்து கூட்டிட்டு வந்து விஜய் முன்னாடி நிறுத்தப் போகிறார். விஜய் மனதில் முழுக்க முழுக்க காவிரி இருந்தாலும் வெண்ணிலா தற்போது பழைய ஞாபகங்களை மறந்து போய் இருப்பதால் வெண்ணிலா பக்கத்தில் இருந்து விஜய் கவனித்துக் கொள்ளப் போகிறார். ஆனாலும் இந்த விஷயத்திற்காக காவேரி மற்றும் விஜய்க்கு இடையில் விரிசல் நிச்சயமாக வரப்போவதில்லை.

- Advertisement -

Trending News