ரஜினி நடித்த பாட்ஷா, கமல் நடித்த நாயகன் போன்ற கேங்ஸ்டர் படங்களின் பாணியில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படமும் கேங்ஸ்டர் கதையில் உருவானது. அதேபோல் அந்த படங்களைப்போலவே இந்த படமும் மும்பையை கதைக்களமாகக் கொண்டு உருவானது. ஆனால் ரஜினி, கமல் படங்கள் மாதிரி தலைவா விஜய்க்கு மிகப்பெரிய ஹிட்டாக அமையவில்லை. என்றபோதும் அவரது ரசிகர்களுக்கு பிடித்த படமானது.

அதையடுத்து கேங்ஸ்டர் கதைகளில் நடிக்காத விஜய், தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரம் 61வது படத்தில் மீண்டும் கேங்ஸ்டர் கதையில் நடிக் கிறார். தலைவா படத்தை விடவும் இது அதிரடியான கதையில் உருவாகிறது. முதன்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்த கதையில் ஒரு விஜய் மாறுபட்ட கெட்டப்பில் அவர் நெகடீவ் வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை சென்னையிலுள்ள பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தபடியாக வெளிநாடுகளுக்கு விசிட் அடிக்கப்போகிறார்களாம்.