fbpx
Connect with us

Cinemapettai

பணம் கொடுத்தது விஜய்.. ட்ரெண்டில் வந்தது அஜித்.. என்ன முருகேசா இதெல்லாம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பணம் கொடுத்தது விஜய்.. ட்ரெண்டில் வந்தது அஜித்.. என்ன முருகேசா இதெல்லாம்

தமிழ் சினிமாவை தற்போது தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் என்றால் அது தல அஜித் மற்றும் தளபதி விஜய் தான். இருவருக்கும் உள்ள ரசிகர் பட்டாளமே அதற்கு சாட்சி.

அதுமட்டுமல்லாமல் விஜய் மற்றும் அஜீத் ஒரு சின்ன விஷயம் செய்தாலும் அதை ட்ரெண்டிங்கில் கொண்டுவருவது அவரது ரசிகர்களின் வேலை. அந்த வகையில் உலகமே கொரானா பாதிப்பில் தவித்து வருவதால் அதற்கு நிவாரண உதவி கேட்டு மத்திய அரசும் மாநில அரசும் கோரிக்கை வைத்துள்ளது.

தல அஜீத் ஏற்கனவே தன்னுடைய பங்காக 1.25 கோடி கொரானா பாதிப்பு நிதியாக கொடுத்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் மேற்கொண்டு 8 லட்சம் கொடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அப்படிப் பார்க்கையில் தல அஜித் 1.33 கோடி நிதியாக கொடுத்துள்ளார்.

ஆனால் நீண்ட நாட்களாக தளபதி விஜய் நிதி கொடுப்பதை பற்றி வாய் திறக்காமல் இருந்தார். ஆனால் அதற்குள் விஜய்யை பிடிக்காதவர்கள் பேசியது கொஞ்ச நஞ்சமல்ல. ஏன் விஜய்யை தேசதுரோகி என்று சொல்லுகிற அளவுக்கு வசைபாடி விட்டார்கள்.

தளபதி விஜய் தன்னுடைய மகன் சஞ்சய் கனடாவில் மாட்டிக் கொண்டதால் அந்த சோகத்தில் இருந்ததாகவும், பிறகு சஞ்சய் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்த விஜய் உடனடியாக கொரானா பாதிப்பு நிதியை அறிவித்துள்ளார்.

விஜய் தனது பங்குக்கு கொரானா தடுப்பு நிதியாக 1.30 கோடியும், மேற்கொண்டு தனது ரசிகர் மன்றம் மூலம் 50 லட்சமும் மொத்தம் 1.80 கோடி செலவு செய்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் #RealHeroThalapathyVIJAY என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர். இதைப் பார்த்த தல ரசிகர்கள் உடனடியாக #அஜித்தைபின்பற்றும்விஜய் என ட்விட்டரில் ட்ரண்ட் செய்தனர்.

காலையில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்த விஜய் ரசிகர்களை ஓரங்கட்டி தல அஜித் ரசிகர்கள் இந்திய அளவில் முதலிடம் ட்ரெண்டிங் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top